1) சங்கத்தின் பெயர் - கனடா தமிழ் திரைப்படக்கலைஞர்கள் சங்கம் (Canadian Tamil Film Artists Association)

2) நோக்கங்கள்:-
2-1) கனடா தமிழ் திரைப்படக் கலைஞர்களை உருவாக்க, ஒருங்கிணைக்க, மேம்படுத்த பாடுபடுதல்.
2-2) கனடா வாழ் தமிழ் திரைப்பட கலைஞர்களின் ஒருமித்த குரலாகவும் அவர்களின் நலனுக்காகவும் பாடுபடுதல்.
2-3) கனடா தமிழர்களால் உருவாக்கப்படும் தமிழ் திரைப்படங்களை பாராபட்ச்சம் இன்றி மக்களிடம் கொண்டு செல்ல, பார்வையாளர்கள் எண்ணிக்கையை கூட்ட, திரைப்படத் துறையை வளர்த்தெடுக்கப் பாடுபடுதல்.
2-4) கனடா தமிழ் திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்காக செயற்படும் அமைப்புகளுக்கு ஒத்துளைப்பு வழங்கி, ஒற்றுமையுடன் செயற்படல்.
2-5) அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த, அவர்களிடையே ஒற்றுமையை, உதவி மனப்பான்மையை வளர்க்க பாடுபடுதல்.
2-6) புலம்பெயர் தமிழர்கள், பல்லின, பன்முக திரைத்துறை சார்ந்த அமைப்புக்கள், நிறுவனங்கள், கலைஞர்கள் போன்றோருடன் இணைந்து பணியாற்றுதல், பரிமாற்றங்கள் செய்தல்.

Share the joy
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
1+